அஜித்தின் புதிய சகோதரர் ஆகிறார் பிரபல வில்லன் நடிகர் கபீர் சிங்
kabir singh
‘தல’ அஜித் நடித்த ‘வேதாளம்’ என்ற வெற்றி திரைப்படத்தில் அஜித்துக்கு ஈடாக வில்லன் வேடத்தில் கலக்கியவர் கபீர்சிங். இவர் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து வரும் சர்தார் கப்பார்சிங்’ என்ற படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித், மற்றும் பவன்கல்யாண் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றி தெரிவித்த கபீர்சிங், ‘அஜித்தும், பவன்கல்யாணும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் அவர்கள் இருவரும் என்னிடம் உடன்பிறந்த சகோதரர்கள் போல பழகினார்கள்.

குறிப்பாக ‘வேதாளம்’ படப்பிடிப்பின்போது படக்குழுவினர் அனைவருக்கும் அஜித் பிரியாணி சமைத்து அனைவருக்கும் பரிமாறிய நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல் பவன்கல்யாண் படப்பிடிப்பின்போது எனக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து என்னிடம் அடிக்கடி உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கின்றதா? என அன்புடன் விசாரித்தார். அஜித், பவன்கல்யாண் இருவருமே என்னிடம் சக நடிகர் போல் பார்க்காமல் என்னை அவர்களுடைய சகோதரர்கள் போல கவனித்து கொண்டனர்’ என்று கூறியுள்ளார்.

தற்போது இரண்டு தெலுங்கு, இரண்டு ஹிந்தி படங்கள் என பிசியாக நடித்து கொண்டிருக்கும் கபீர்சிங் மீண்டும் ஏப்ரலுக்கு பின்னர் தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Chennai Today News: Ajith and Pawan Kalyan are liked my brothers

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *