shadow

‘வேதாளம் படத்தின் சாதனையை ‘தங்க மகன்’ முறியடிக்குமா?
dhanush
சமீபத்தில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படம் வசூலில் பல சாதனைகளை செய்துள்ளது. கோலிவுட்டில் இதுவரை வெளியான திரைப்படங்களில் முதல்நாளில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘வேதாளம்’ பெற்றது.

அதுமட்டுமின்றி ‘எந்திரன்’ படத்தின் சாதனையை முதல் வாரத்தில் முறியடித்தது, ஒரே வாரத்தில் ரூ.100 கோடி வசூலை நெருங்கியது என பல சாதனைகளுக்கு ‘வேதாளம்’ சொந்தம் கொண்டாடியுள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள ‘தங்கமகன்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் ‘வேதாளம்’ படத்தின் முதல்நாள் வசூலை முறியடிக்கும் என தனுஷ் கூறியதாக ஒருசிலர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். இந்த செய்தி உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் அதற்குள் அஜித் ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் டுவிட்டரில் மோதிக்கொண்டு வருகின்றனர்.

தனுஷூம் விஜய்யும் நெருக்கம் என்பதால் அஜித் ரசிகர்கள் சிம்புவை டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் தனது டுவிட்டரில் நடிகர்களை டுவிட்டரில் திட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply