shadow

அஜீத்தும் அரவிந்தசாமியும் ஒரே படத்தின் வில்லன்களா? அதிர வைக்கும் செய்தி
aravindasamy
சமீபத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்கு ஜெயம் ரவியின் நடிப்பு மற்றும் ஜெயம் ராஜாவின் இயக்கத்தை விட அரவிந்தசாமியின் வில்லன் நடிப்பே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கே அவர்தான் முக்கிய காரணம் என்றவகையில்தான் அனைத்து விமர்சனங்களும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு பதில் வேறு எந்த நடிகர் நடித்தாலும் இந்த படம் இந்த அளவுக்கு வெற்றியை பெற்றிருக்காது என்றே கூறப்படும் நிலையில் இந்த கேரக்டருக்கு அஜீத் மிகவும் பொருத்தமாக இருந்திருப்பார் என்றும் இந்த படத்தில் அஜீத் நடித்திருந்தால் இந்த படம் வேற லெவலுக்கு சென்று இருக்கும் என்று பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரவிந்தசாமி, “நானும் அஜீத்தும் ஒரே படத்தில் பவர்ஃபுல் வில்லன்களாக நடித்தால், அந்த படம்தான் அனேகமாக தமிழ் சினிமாவின் அதிகபட்ச சூப்பர் ஹிட் படமாக இருக்கும்’ என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அஜீத்தின் அடுத்த படங்களை இயக்கவுள்ள இயக்குனர்கள் இதை கேட்டுக்கொண்டு, அவர்களுடைய படத்தில் அரவிந்தசாமியையும் அஜீத்தையும் சேர்த்து வில்லன்களாக நடிக்க வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *