shadow

அஜித் படத்துடன் மோதும் ஆண்ட்ரியா படம்

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் வெளிவருவது உறுதி என்றே விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் அஜித்தின் ‘விவேகம்’ ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆண்ட்ரியா நடிப்பில் ராம் இயக்கிய ‘தரமணி’ திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தங்க மீன்கள்’ படத்திற்கு பின்னர் ராம் இயக்கத்தில் வெளியாகும் வெளியாகவுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா, வசந்த், அழகம்பெருமாள் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Leave a Reply