shadow

ரஜினியின் பரிந்துரையை அஜித் ஏற்காதது ஏன்?

ajithசந்திரமுகி உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பி.வாசு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ‘ஷிவலிங்கா’.  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், வேதிகா நடித்த இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பி.வாசு பெற்றுள்ளார்.  இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிக்க வைக்க பி.வாசு முயற்சி செய்தார். ஆனால் தற்போது ‘கபாலி மற்றும் ‘2.0’ படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை

ஆனால் அதே நேரத்தில் சிவராஜ்குமார் நடித்த கம்பீரமான போலீஸ் கேரக்டருக்கு அஜித் பொருத்தமாக இருப்பார் என்றும் அவரை அணுகும்படியும் பி.வாசுவிடம் ரஜினி பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் ‘வேதாளம்’ படத்திற்கு பின்னர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கவுள்ள ‘அஜித் 57’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்த பின்னர் அவர் விஷ்ணுவர்தன்-பாலகுமாரன் கதையில் உருவாகவுள்ள சோழர் கால சரித்திர படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது

எனவே ரஜினி பரிந்துரை செய்தபோதிலும் இப்போதைக்கு ஷிவலிங்கா ரீமேக்கில் அஜித் நடிக்க மாட்டார் என்றே கோலிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகிறது.

Leave a Reply