shadow

ajithசமீபத்தில் என்னை அறிந்தால்’ வெற்றி படத்தை கொடுத்த தல அஜீத்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தல 56′ படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், ஸ்ருதிஹாசன் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தில் அஜீத் இதுவரை ஏற்றிராத அரசியல் தலைவர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சொந்த வாழ்வில் அரசியலில் ஈடுபடுவதை சிறிதும் விரும்பாத அஜீத், திரையில் அரசியல்வாதியாக கலக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அஜீத் நடிக்கவுள்ள அரசியல்வாதியின் வேடம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய கேரக்டர் எந்த அரசியல்வாதியை தாக்கும் வகையில் இருக்கும் என்பதும் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்துக்கு பெரிய அளவில் மாஸ் இருப்பதால் அவருடைய கேரக்டர் குறித்து அரசியல்வாதிகள் அச்சப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, அஜீத்தின் வேடம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply