shadow

vijay and ajithஅஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் அஜீத் 55 படத்தின் டைட்டில் ரெடியாகிவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘ஆயிரம் தோட்டாக்கள், சத்யா என்ற டைட்டில்கள் எல்லாம் கிடையாதாம். வழக்கம்போல கவுதம் மேனன் பாணியில் கவிதை மாதிரியான தலைப்புதான் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இந்த படத்தின் டைட்டிலை தீபாவளிக்கு முந்தைய நாள் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் நடிப்பில் வெளியாகும் ‘கத்தி’ படத்துடன் அஜீத் படத்தின் டிரைலரை வெளியிடவும் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அஜீத் ,விஜய் ஆகியோர் தொழில் போட்டியில் இருந்தாலும், இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆயினும் இந்த நட்பை அவர்கள் தொழிலில் காட்டியது கிடையாது. சமீபத்தில்கூட ஜில்லாவும் வீரமும் மோதிக்கொண்டதை பார்த்தோம்.

ஆனால் தற்போது முதல்முறையாக விஜய் படத்துடன் அஜீத் படத்தின் டிரைலரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களை ஒருங்கிணைக்க செய்யும் முயற்சியே இது என்று கூறப்படுகிறது. இதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்துவிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply