shadow

ஜியோவுக்கு போட்டியாக சலுகைகளை அள்ளி வழங்கிய ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டாக்கள் மற்றும் அழைப்புகளை அள்ளி வழங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக தற்போது ஏர்டெல் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி ஏர்டெல் தனது லேண்ட் லைன் இன்டர்நெட் சேவையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அங்கமாக இணைய வேகத்தை அதிகரிக்கும் விதமாக வி-ஃபைபர் (V-Fibre) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஃபைபர் வயர்கள் மூலம் இணைய சேவை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல் இணைய சேவை நொடிக்கு 100MB ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, 3.51 லட்சம் லேண்ட் லைன் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் உள்ளனர். என்றும் அவர்கள் அனைவரையும் ஃபைபர் இணைய சேவைக்கு அழைக்கும் நோக்கில் அறிமுகச் சலுகையையும் ஏர்டெல் அளிக்கிறது.

ஃபைபர் இன்டர்நெட் சேவையில் இணைபவர்கள் ரூ.1,299 மாதக்கட்டணத்தில் 60GB டேட்டா இலவசமாகப் பெறலாம். மேலும், அனைத்து அழைப்புகளையும் இலவசமாகச் செய்யும் சலுகையும் கிடைக்கும். ரூ.599 மாதக்கட்டணத்தில் 10GB டேட்டா அளிக்கும் அடிப்படைத் திட்டமும் உள்ளது. ஆனால் அதில் இலவச அழைப்பு செய்யும் சலுகை கிடையாது என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. சாதாரண லேண்ட் லைன் இணைப்பு வைத்திருப்பவர்கள் ரூ.1,000க்கு ஃபைபர் சேவைக்கான மோடம் வாங்கினால் போதும். இந்த மோடத்தை தவணை முறையிலும் வாங்கலாம்.

Leave a Reply