ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்: தமிழக அமைச்சர் தகவல்

இந்தியாவின் புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் ராமேஸ்வரத்தில் புதியதாக விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு விமான நிலையங்களுக்கு சேவை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ராமேஸ்வரம் ஆன்மீக தலம் என்பதால் இந்த வசதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

காசிக்கு செல்லும் பக்தர்கள் ராமேஸ்வரம் சென்றுவிட்டு தான் வீடு திரும்பும் ஐதீகம் உள்ளது. எனவே ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் அங்கு சென்று வரும் பக்தர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *