shadow

maran brothersஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இன்று மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் இருவரும் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வரும் 16ம் தேதிக்கு விசாரணைக்கு வரும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏர்செல் நிறுவன பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க அப்போது மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் வற்புறுத்தியதாகவும், இந்த விற்பனை காரணமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் அவர்களின் சன் குழுமம் ஆதாயம் அடைந்ததாகவும் 2ஜி வழக்கில் சிபிஐ குற்றம்

இதையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், உள்பட இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் இன்று ஆஜராக வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.

அப்போது கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேக்சிஸ் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன், சிஇஓ ரால்ப் மார்சல் ஆகியோர்கள் மலேசியாவில் இருப்பதால் சம்மன் அனுப்ப இயலவில்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply