ஒபாமாவின் ஏர்போர்ஸ் ஒன் விமானம் அருகே மோடி சென்ற விமானத்திற்கு அனுமதி
modi
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்தில் இருந்து துருக்கி நாட்டிற்கு பிரதமர் மோடி சென்ற ஏர் இந்தியா விமானம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஏர்போர்ஸ் ஒன் விமானம் அருகே நிறுத்த அனுமதிக்கப்பட்டது. பொதுவாக  பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒபாமாவின் விமானத்துக்கு அருகே வேறு நாட்டு விமானங்களை நிறுத்த அமெரிக்க அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.

ஆனால் துருக்கியில் இதற்கு விதிவிலக்காக இந்திய பிரதமர் மோடி சென்ற ஏர் இந்தியா ஒன் விமானமும், ஒபாமாவின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமும் அருகருகே நிறுத்த அனுமதிக்கப்பட்டது. இந்த செயல் மோடிக்கு சர்வதேச அளவில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வருவதை காட்டுவதாகவே கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் முக்கிய தலைவராக குறிப்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மரியாதைக்குரிய தலைவராக மோடி விளங்கி வருவதாக அமெரிக்க நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Air India One gets parking slot close to Obama’s Air Force One

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *