shadow

thambithuraiஅதிமுக எம்பி தம்பிதுரை அவர்கள் மக்களவை துணை சபாநாயர் பதவிக்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணை சபாநாயகர் பதவி ஆகிய இரு பதவிகளையும் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற மரபு. இதன்படி மக்களவையில் 37 எம்.பிக்களை கொண்டதும், இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியுமாக இருக்கும் அதிமுகவுக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்க பாரதிய ஜனதா அரசு முன்வந்துள்ளது. இதன்படி இன்று மக்களவையில் அதிமுக எம்.பி. தம்பித்துரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
 

தம்பிதுரையின் வேட்புமனுவை மத்திய உள்துறை அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல் கே அத்வானி ஆகியோர் முன் மொழிந்தனர்.  நாளை நடைபெறும் மக்களவை துணை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மதியத்துடன் முடிவடைவதால் தம்பித்துரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால், தம்பித்துரை தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply