அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா சமீபத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான நான்கு வேட்பாளர்களை அறிவித்தார். அதில் ஒருவர் சின்னத்துரை. இன்று சற்று முன் ஜெயலலிதா விடுத்த ஒரு அறிக்கையில் மாநிலங்களவை வேட்பாளர் சின்னத்துரை அதிரடியாக நீக்கபட்டதாகவும், அதுமட்டுமின்றி அவரை கட்சியிலும் இருந்து நீக்குவதாகவும் அறிவித்துள்ளார்.

சின்னத்துரைக்கு பதிலாக அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஏ.கே.செல்வராஜ் போட்டியிடுவார் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேட்பாளரை அறிவித்த இரண்டே நாட்களில் அவரை நீக்கிவிட்டு வேறு வேட்பாளரை ஜெயலலிதா அறிவித்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்துரையை நீக்கியதற்கான காரணம் எதையும் தெரிவிக்காததால் பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

Leave a Reply