shadow

ai teaserஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ரூ.180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரான ‘ஐ’ திரைப்படத்தின் டீஸர் இணையத்தில் திருட்டுத்தனமாக நேற்று வெளியானது. இதனால் ஷங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐ படத்தின் டீஸரை வெளியிட்ட மர்ம நபரை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் நிறுவனத்தில் வேலை செய்யும் வாசன் என்பவர்தான் இந்த டீஸரை தயாரிப்பாளருக்கு தெரியாமல் திருடி இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 15ஆம் தேதி ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும், டிரைலர் வெளியீடும் நடக்கவுள்ள நிலையில் இண்டர்நெட்டில் டீஸர் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல் வெளியீட்டு விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மற்றும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஷங்கரின் இரண்டு வருட உழைப்பு, விக்ரமின் அர்ப்பணிப்பு ஆகிய கலந்துள்ள ஐ படம் தமிழ்த்திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று கூறப்படுகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1BcM4o7″ standard=”//www.youtube.com/v/INpvkCeWCn8?fs=1″ vars=”ytid=INpvkCeWCn8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4006″ /]

Leave a Reply