shadow

ஹெலிகாப்டர் ஊழலை வெளியே கொண்டு வர இத்தாலி அரசுடன் மோடி ரகசிய பேச்சு வார்ததையா?

VBK-MODI_1865200f_2646360fஇத்தாலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லாண்டு என்ற நிறுவனத்திடம் இருந்து விஐபிக்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த ஊழலில் சோனியா காந்திக்கு நேரடி தொடர்பு உள்ளதாக சமீபத்தில் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இந்த ஊழலை வெளியே கொண்டு வருவது குறித்து இத்தாலி அரசுடன் பிரதமர் மோடி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு கூறியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு இன்று மறுத்துள்ளது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் பேரத்தில் ஊழல் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு இத்தாலி நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளதால் இந்த விவகாரம் தற்போது இந்தியாவிலும் சூடு பிடித்துள்ளது. சோனியா காந்தி மீதான ஊழல் குற்றச்சாட்டை பாரதிய ஜனதா தீவிரப்படுத்தி வரும் நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில், ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு உள்ள தொடர்பு குறித்த ஆவணங்களை அளிக்குமாறு, இத்தாலி பிரதமரிடம் மோடி, கேட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இது அடிப்படை ஆதாரமற்றது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply