shadow

விஜய்-60ஐ அடுத்து அஜித் படத்திலும் கீர்த்தி சுரேஷ்
keerthy suresh
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த முதல் படமான ‘இது என்ன மாயம்’ தோல்வி அடைந்தாலும், ரஜினிமுருகன்’ பெற்ற சூப்பர் ஹிட் வெற்றி அவரை முன்னணி இடத்திற்கு கொண்டு சேர்த்துவிட்டது.

‘ரஜினிமுருகன்’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’ மற்றும் விஜய் நடிக்கும் 60வது படம், ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு இணையும் படம் என தொடர்ந்து பெரிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்திசுரேஷ் தற்போது அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண் நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்சுரேஷிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷின் அபாரமான வளர்ச்சி முன்னணி நடிகைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply