shadow

‘ஜெமினி கணேசன்’ படத்தில் நடிக்கின்றார் ஜீவா
jiiva
கோ, சிவா மனசுல சக்தி, நண்பன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் ஜீவா, ‘யான்’ படத்தின் தோல்வியால் நடிக்க வாய்ப்பின்றி இருந்தார். இந்நிலையில் அவர் தன்னுடைய சம்பளத்தை வெகுவாக குறைத்ததால், தற்போது திருநாள், போக்கிரி ராஜா, கவலை வேண்டாம் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ஹன்சிகா மற்றும் காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் முத்துராமன் இயக்கவுள்ள புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ‘ஜெமினி கணேசன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த டைட்டிலுக்காக ஜெமினிகணேசன் குடும்பத்தினர்களிடம் முறையான அனுமதியை படக்குழுவினர் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply