shadow

‘தெறி’ இயக்குனர், பாகுபலி ஹீரோ இணணயும் பிரமாண்ட படம்

இளையதளபதி விஜய் நடித்த தெறி’ படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது மீண்டும் விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அட்லி இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படத்தைதான் அட்லி இயக்கவுள்ளதாகவும், இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை பிரபாஸ் உடன் வெற்றிகரமாக முடிந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த பேச்சுவார்த்தைக்காகத்தன் சமீபத்தில் நடந்த ‘பாகுபலி 2’ பட விழாவில் அட்லி கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் என தெலுங்கு நடிகர்கள் பலர் தமிழ் ரசிகர்களை குறி வைத்துள்ள நிலையில் தற்போது பிரபாஸூம் நேரடி தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply