shadow

அஜித், சிம்பு, தனுஷ் வழியில் மகேஷ்பாபு
gautham menon
நடுநிசி இரவில், நீதானே என் பொன்வசந்தம் தோல்விகளுக்கு பின்னர் இயக்குனர் கவுதம் மேனனை தூக்கி விட்ட திரைப்படம் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால். இந்த படத்திற்கு பின்னர் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கிவரும் கவுதம் மேனன் அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்கவுள்ளார். இதுவொரு குறுகிய கால திரைப்படம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு, தனுஷ் படங்களை முடித்த பின்னர் அடுத்ததாக கவுதம்மேனன், மகேஷ்பாபு படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தெலுங்கின் பிரபல நிறுவனம் வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகேஷ்பாபு தற்போது ‘பிரமோத்சவம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை அடுத்து அவர் கவுதம் மேனன் படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply