shadow

6 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவர் வீரர் கோமாவில் இருக்கின்றாரா?
coma
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய கர்நாடகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லேன்ஸ் நாயக் ஹனமந்தப்பா டெல்லி மருத்துவமனையில் கோமாவில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அவருக்கு நினைவு திரும்ப வரவழைக்க மருத்துவர்கள் குழு போராடி வருகிறது.

கடந்த 3-ம் தேதி  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீட்புப்பணியின்போது 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் ராணுவ வீரர் லேன்ஸ் நாயக் ஹனமந்தப்பா என்பவர் மீட்கப்பட்டார். தற்போது அவர் டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், கோமாவில் இருப்பதாகவும் முதற்கட்ட மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

ஹனமந்தப்பா அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் விபரங்கள் குறித்து நேற்று பிரதமர் மோடியும், ராணுவ தலைமை அதிகாரியும் நேரில் சென்று விசாரித்தனர். இதுவரை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில்  4 பேரின் சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மீதியுள்ள நான்கு பேர்களின் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லெப்டினண்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஹனமந்தப்பா குணமாகி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியாவின் பல இடங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Chennai Today News: After Siachen Miracle Rescue, Soldier Now In Coma. India Holds Its Breath

Leave a Reply