ரஜினியை அடுத்து பவன் கல்யாண் டுவீட்டையும் நீக்கிய டுவிட்டர்: அதிரடி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை டுவிட்டர் அதிரடியாக நீக்கியது என்பது தெரிந்ததே

ரஜினி கூறிய ஒரு சில கருத்துக்கள் டுவிட்டரின் விதிமுறைகளுக்கு முரணாக இருந்ததால் டுவிட்டர் இந்தியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு ஒரு பக்கம் வரவேற்பும் இன்னொரு பக்கம் ரஜினி ரசிகர்கள் இணைந்து எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியை அடுத்து பவன் கல்யாண் வெளியிட்ட ஒரு டுவிட்டையும், டுவிட்டர் இந்தியா நீக்கியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபலமானவர்கள் இதுபோன்ற சென்சிட்டிவான கருத்தை தெரிவிக்கும் போது சரியான புரிதலோடு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்

Leave a Reply