shadow

saintகங்கையை சுத்தப்படுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்த பீடாதிபதி நாக்நாத் யோகேஷ்வர் நேற்று திடீரெனமரணமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கங்கையை சுத்தப்படுத்தக்கோரி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி காசி மகாசம்சான் என்ற பீடத்தின் பீடாதிபதியாக இருக்கும் நாக்நாத் யோகேஷ்வர் என்பவர் 2008ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி முதல், உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மூன்று வருடங்களுக்கும் மேல் உண்ணாவிரதத்தை தொடர்ந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு நாக்நாத் யோகேஷ்வர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். அவர் மத்திய பிரதேச மாநிலகவர்னர் ராம் நரேஷ் யாதவ் விடுத்த வேண்டுகோளுக்காக உண்ணாவிரதத்தை கைவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கங்கை நதியை தூய்மைப்படுத்தவும் அதன் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் நாக்நாத் யோகேஷ்வர் வாரணாசியில் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது சிஷ்யர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழக சுந்தர்லால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி நாக்நாத் யோகேஷ்வர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவருடைய மரணத்தால் வாரணாசியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் கோரிக்கைக்காக மரணமடைந்த 2வது பீடாபதி நாக்நாத் யோகேஷ்வர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, சுவாமி நிக்மானந்த் என்பவர் கடந்த 2011ல் மரணம் அடைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply