ஹேக்கர்ஸ் அபாயம் எதிரொலி: கூகுளில் இருந்து செயலியை நீக்கிய காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் ‘வித் ஐ.என்.சி’ செயலிக்கு ஹேக்கர்ஸ் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி அதிரடி நடவடிக்கையாக அந்த செயலியை கூகுளில் இருந்து நீக்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க ‘வித் ஐ.என்.சி’ என்ற இந்த செயலி உள்ளது. இந்த செயலி மூலம் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில், அந்த செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ‘ஹேக்கர்’ எல்லியட் அல்டர்சன் என்பவர் டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நமோ செயலி நீக்கப்பட்டதற்கு, நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் தாக்கி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *