shadow

பிரிட்டனை போலவே டெல்லியிலும் பொதுவாக்கெடுப்பு அரவிந்த் கெஜ்ரிவால்

aravindஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பொதுவாக்கெடுப்பு நடத்திய பிரிட்டன் வெளியேறவுள்ளது இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி இந்தியாவின் பொருளாதாரத்தையே சற்று ஆட்டம் காணவைத்த நிலையில் மேலும் ஒரு இடியாக பிரிட்டனை போலவே டெல்லியிலும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வாக்கெடுப்பின் மூலம் டெல்லி முழு மாநில அந்தஸ்தை பெற வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி தற்போது யூனியன் பிரதேசமாக உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அவர் டெல்லி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், “பிரிட்டன் பொதுவாக்கெடுப்பையடுத்து டெல்லிக்கும் பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கோரிக்கையை ‘அபாயகரமானது’ என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கண்டித்துள்ளார். “அரசமைப்புச் சட்டம் எந்த ஒரு பொதுவாக்கெடுப்பையும் அனுமதிப்பதில்லை. கெஜ்ரிவால் அபாயகரமான ஒரு பாதையில் செல்கிறார். பிற மாநிலங்களும் இத்தகைய பொதுவாக்கெடுப்பைக் கோரும் நிலைமைகளை அவர் உருவாக்கப்பார்க்கிறார். காஷ்மீர் பிரச்சினை உள்ள போது, கெஜ்ரிவால் வேண்டுமென்றே இந்த விவகாரத்தைக் கிளறுகிறார். இது தேச-விரோதமானது” என்று கூறினார்.

Leave a Reply