shadow

தல அஜித்துக்காக பாட்டு பாடும் உலகப்புகழ் பெற்ற பாடகர்

தல அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக பாடல்களை கம்போஸ் செய்யும் பணியை கிட்டத்தட்ட அனிருத் முடித்துவிட்டதாக தெரிகிறது.

‘வேதாளம்’ போலவே இந்த படத்திலும் ஆலுமா டோலுமா டைப்பில் ஒரு பாடலை அனிருத் கம்போஸ் செய்திருப்பதாகவும், இந்த பாடலை மலேசியாவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாடகர்  யோகி பி பாடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செய்தியை யோகி பி தனது டுவிட்டரில் உறுதி செய்ததோடு, அனிருத் மற்றும் தல ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் Im sincerely thankful to you brother fr the awesome music that was a high to rhyme on.Nandri for the opportunity.Nandri all.#AK57 it is! என்று பதிவு செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே தமிழில் விஜய் நடித்த குருவி, தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ ஆகிய படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply