சென்னையில் திமுக ஆட்சியில் பலகோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை அதிமுக அரசு பதவியேற்றவுடன் நவீன மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசின் அனுமதியும் கிடைத்ததால் ரூ.26.92 கோடி மதிப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் பணி கடந்த வருடம் முதல் நடந்து வருகிறது. இந்த பணி வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நவீன மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர், மருத்துவர்கள் அறைகள், ஸ்கேன் மையங்கள், நர்ஸ் அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
அனைத்து நோய்களுக்க் உயர் சிகிச்சை அளிக்கும் நவீன இயந்திரங்கள் ஆகியவை வரவுள்ளன. 9 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் மிகவும் பிரமாண்டமான அமைய இருக்கும் இந்த மருத்துவமனையில் 7 மாடிகள் உள்ளன

லிப்ட், பூங்கா, ஜெனரேட்டர், போன்ற வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.  மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.74 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் தேதி குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்துவருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply