shadow

ரஜினி-கவுண்டமணியின் ‘மன்னன்’ ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்-வடிவேலு

கடந்த 1992ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கிய வெற்றிப்படம் ‘மன்னன்’. சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த படம் தற்போது 25 வருடங்கள் கழித்து ரீமேக் செய்யப்படவுள்ளது.

இந்த படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும், ரஜினியின் ‘மன்னன்’ படத்தை இயக்கிய அதே பி.வாசு இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

‘மன்னன்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து சூப்பராக காமெடி செய்திருப்பார். இந்நிலையில் புதிய ‘மன்னன்’ படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் வடிவேலு கலக்க உள்ளார்.

மேலும் விஜய்சாந்தி வேடத்தில் பிரபல நடிகை ஒருவரும் குஷ்பு வேடத்தில் புதுமுக நடிகை ஒருவரும் நடிக்கவுள்ளார்களாம். இதுகுறித்த அறிவிப்பு மிக விரரவில் வெளிவரவுள்ளது

Leave a Reply