shadow

25 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேரும் குஷ்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பு இணைந்து நடித்த ‘பாண்டியன்’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’ ஆகிய மூன்று திரைப்படங்களும் கடந்த 1992ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் 25 வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினி-குஷ்பு ஜோடி சேரப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஷங்கர் இயக்கி வரும் ‘2.0’ படத்திற்கு பின்னர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க குஷ்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை இயக்குனர் ரஞ்சித் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என தெரிகிறது. தனுஷின் ‘வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 14 முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply