shadow

14 வருடங்களுக்கு பின் கமலுடன் மீண்டும் இணையும் பஞ்சதந்திர நாயகி
kamalramya11
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த ‘பஞ்சதந்திரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை ரம்யாகிருஷ்ணன், மீண்டும் 14 வருடங்கள் கழித்து கமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘தூங்காவனம்’ வெற்றி படத்திற்கு பின்னர் கமல் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்க ரம்யாகிருஷ்ணன் ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.

கமல் மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளது. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை கமல் தொடங்கிவிட்டதாகவும், வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ்குமார் இயக்கவுள்ளதாகவும், இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply