shadow

100 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சையில் நாளை தேரோட்டம் நடைபெறவிருப்பதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
tanjore 1
1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின்  சித்திரை திருவிழா, கடந்த சில நாட்களாக வெகு சிறப்பாக தஞ்சையில் நடந்து வருகிறது. இந்நிலையில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் பெரிய கோவிலின் தேரோட்டம் நாளை நடக்கவிருப்பதால் இவ்விழாவில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,சேலம்,விழுப்புரம்,ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேரோட்டத்தையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர்  சுப்பையன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நாளை (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

உள்ளுர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் வராது என்பதால் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக்  கருவூலங்களும் உள்ளுர் விடுமுறை நாளான நாளை அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply