தமிழ் இணையதளங்களுக்கும் ஆட்சென்ஸ்: கூகுள் அரிவிப்பு

இணையத்தில் பல்வேறு மொழி பயன்பாடு மற்றும் பன்மொழி தகவல்களை ஊக்குவிக்கும் வகையில் கூகுல் ஆட்சென்ஸ் (AdSense) சேவையில் தமிழ் மொழி இணைக்கப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் ஆட்சென்ஸ் விளம்பர சேவையை கொண்டு தமிழ் மொழி தகவல்களை எழுதுபவர்கள் வருவாய் ஈட்ட முடியும். 2003-ம் ஆண்டு கூகுளில் ஆட்சென்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சேவையை கொண்டு கூகுள் இணையத்தளம், வலைத்தளம் உள்ளிட்டவற்றில் தகுதியான விளம்பரங்களை பதிவிட்டு, விளம்பரங்களை வழங்குவோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து, குறிப்பிட்ட தொகையை வலைத்தள உரிமையாளருக்கு கூகுள் வழங்குகிறது.

இதனால் கூகுளில் வலைத்தளம் மற்றும் வலைப்பக்கம் உள்ளிட்டவற்றில் தகவல் வழங்குவோர் வருவாய் ஈட்ட முடிந்தது. முன்னதாக தமிழ் மொழி எழுத்தாளர்கள் மற்றும் வலைத்தள நிறுவனங்கள் கூகுள் அல்லாத மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களை நாடும் நிலை இருந்து வந்தது.

அந்த வகையில் கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு இருப்பது இணையத்தில் புழங்கி வரும் தமிழ் மொழி எழுத்தாளர்கள் மற்றும் வலைத்தள நிறுவனங்களுக்கு வருவாய் ஈட்ட வழி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இணையத்தில் தமிழ் மொழி பயன்பாடு கணிசமான அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் தமிழ் மொழி இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய அறிவிப்பின் படி தமிழ் மொழி தகவல்களை வழங்கி வரும் இணையத்தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களில் தமிழ் மொழி விளம்பரங்கள் இடம்பெறுவதை பார்க்க முடியும்.

சமீபத்தில் கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் பெங்காளி மொழி சேர்க்கப்பட்டது. ஏற்கனவே இந்தி, அரபிக், பல்கேரியன், சைனீஸ், க்ரோடியன், செக், தட்சு, தானிஷ், ஆங்கிலம், எஸ்தோனியன் மற்றும் பல்வேறு இதர மொழிகளுக்கு கூகுள் ஆட்சென்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *