shadow

‘பாகுபலி 2’ பட பட்ஜெட்டில் நான் 200 படத்தை எடுத்துவிடுவேன். தேசிய விருது இயக்குனர்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2’ திரைப்படம் ரூ.1600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் குறிப்பாக இந்திய திரையுலக பிரபலங்களின் பெரும் பாராட்டுக்களை பெற்றது.

இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பாகுபலி 2′ படம் குறித்து கூறியபோது, ‘பாகுபலி 2’ படத்திற்கு ரூ.200 கோடி செலவு செய்ததாக கூறுகின்றனர். இந்த பட்ஜெட்டில் நான் 200 படங்கள் எடுத்துவிடுவேன்.

மேலும் இந்த படம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘பாதாள பைரவி’ என்ற படத்தின் காப்பிதான் என்று கூறிய அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த படத்தை பார்க்க நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன்’ என்று கூறியுள்ளார். உலகமே போற்றும் ஒரு படத்திற்கு தேசிய விருது பெற்ற ஒருவர் நெகட்டிவ் விமர்சனம் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply