shadow

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு
admk
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்களாக வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன்,  மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வைத்திலிங்கம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவர் என்பதும், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தமாகவில் இருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மாநிலங்களவை எம்.பியை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபையில் அதிமுகவுக்கு 133 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் இந்த மூவரின் வெற்றி உறுதியாகியுள்ளது.  திமுக ஏற்கனவே டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ள நிலையில் ஆறாவது எம்.பி. யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply