shadow

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா தேர்தலுக்கு அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் போட்டியிடவுள்ளனர். மூன்றாவது வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த முடிவு அதிமுக ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளன்ர.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *