shadow

சட்டமன்றத்திற்கு ‘சின்னம்மா’ காட்டும் மரியாதை இதுதானா?

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான சட்டம், கவர்னர், உரை, மெரீனா கலவரம் தொடர்பான அறிக்கைகள் ஆகியவற்றில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தையும் எம்பிக்கள் கூட்டத்தையும் நேற்று கூட்டியுள்ளார். எம்.எல்.ஏக்களுக்கும் எம்பிக்களுக்கும் ஆலோசனை கூறவே அவர் இந்த கூட்டத்தை கூட்டினாராம்.

சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவற்றில் கலந்து கொள்ளாத ஒருவர், இதுவரை எம்பி, எம்.எல்.ஏ ஆகிய பதவிகளில் இல்லாத ஒருவர், சட்டமன்ற பாராளுமன்ற கூட்டத்தின் நடைமுறைகளை கூட தெரியாத ஒருவர் என்ன ஆலோசனை கூறப்போகிறார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. அதுவும் இந்த ஆலோசனையை சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போதா தெரிவிப்பது என்று எம்.எல்.ஏக்களே பலர் புலம்பி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் முதல்வர் பன்னீர் செல்வம் பெயர் மட்டும் பேசப்பட்டு வரும் நிலையில், தன் பெயர் ஊடகங்களில் வருவது குறைந்துள்ளதால், இந்த அதிமுக கூட்டம் நடத்த சசிகலா ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த நடவடிக்கை அவருக்கு கெட்ட பெயரைத்தான் வாங்கித்தரும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் யாராவது அறிவுரை கூற வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

Leave a Reply