shadow

பேச்சுவார்த்தைக்கு முன்பே நிபந்தனையா? எடப்பாடி தரப்பு வருத்தம்

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய பேச்சுவார்த்தை இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையை குலைக்கவும் சிலர் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. பஞ்சாயத்தை கலைக்க முற்படும் வடிவேலு சுனா பனா மாதிரி ஒருசிலர் செயல்பட்டு வருவதாகவும், இவர்களுடைய சதியில் அதிமுக தலைவர்கள் வீழ்ந்துவிட கூடாது என்றும் அரசியல் விமர்சகர்கள் எச்சரித்து வருகின்றனர்

இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு முன்னரே ஓபிஎஸ் அணியினர் நிபந்தனைகளை விதிப்பது, அ.தி.மு.க இணைப்புக்கு முட்டுக்கட்டையாக அமைவதாக, எம்.பி.,வைத்திலிங்கம் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க இணைப்புகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்பி., வைத்திலிங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த வைத்திலிங்கம், “ஓ.பி.எஸ் தரப்பு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னரே பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. இது, பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும். மேலும், அவர்கள் கேட்டுக்கொண்டப்படி ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தத் தயார். ஆனால், அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் ” என்று ஓ.பி.எஸ் அணிக்கு மீண்டும் அழைப்புவிடுத்துள்ளார்.

Leave a Reply