jaya and modi40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தீவிரமாக பிர்ச்சாரத்திற்கு கிளம்பிவிட்ட நிலையில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை உற்றுநோக்கும் அரசியல் கணிப்பாளர்கள், அவரிடம் ஒரு பெரிய மாற்றம் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல மோடியும் காங்கிரஸை விளாசி தள்ளுகிறார். ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜக குறித்து எவ்வித கருத்தும் கூறவில்லை. அதேபோல் மோடி தமிழகம் வந்தபோதும், அதிமுக ஆட்சி குறித்து விமர்சனம் செய்யவில்லை. எனவே இரு கட்சிகளும் ரகசிய தேர்தல் உடன்பாடு வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அதிமுகவின் வெற்றியை பாதிக்கக்கூடிய ஒரே கட்சி விஜயகாந்தின் தேமுதிக மட்டுமே. அதனால் விஜயகாந்துடன் கூட்டணிப்பேச்சுவார்த்தை என்று கடைசி வரை இழுத்தடித்துவிட்டு, கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவிக்க பாரதிய ஜனதா ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்ட பிறகு விஜயகாந்தை தனியே தவிக்கவிடும் பொருட்டு, பாஜக அணி திடீரென அதிமுகவிடம் கூட்டணி அமைக்க ரகசிய திட்டம் போட்டுள்ளது. எனவேதான் அதிமுகவும் இடதுசாரிகளுக்கு தொகுதிகள் ஒதுக்காமல் உள்ளது. இதனால் கம்யூனிஸ்ட்கள் மற்றும் தேமுதிக கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கடைசி நேரத்தில் பாரதிய ஜனதாவுக்கு 6 தொகுதிகள் மட்டும் கொடுத்துவிட்டு அதிமுக 34 தொகுதிகளில் நிற்கும் என்றும் பாரதிய ஜனதாவை இதுவரை நம்பியிருந்த தேமுதிக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளும், அதிமுகவை நம்பியிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் நட்டாற்றில் விடப்படும் என்றும் கூறப்படுகிறது

மேலும் தேர்தலுக்கு பின்னர் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் பட்சத்தில் ஜெயலலிதாவுக்கு துணை பிரதமர் பதவியும், அதிமுக எம்.பி.க்களுக்கு முக்கிய கேபினட் மந்திரி பதவியும் தரப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply