shadow

நடிகையும் மக்களவை எம்பியுமான சுமலதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இதனை அடுத்து அவருக்கு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

விசு இயக்கிய குடும்பம் ஒரு கதம்பம், சிவாஜி கணேசன் நடித்த தீர்ப்பு உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் சுமலதா

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார் என்பதும் கர்நாடக மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்பி சுமலதா என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுமலதா ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்