முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும்: ஸ்ரீரெட்டி

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி கொண்டே செல்லும் நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில் இயக்குனர் முருகதாஸ் தனக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

நான்கு வருடங்களுக்கு முன்பு இயக்குநர் முருகதாஸ் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டு தற்போது தன்னை யார் என்று தெரியாது என கூறி வருவதாகவும் உண்மை என்னவென்பது அவரது மனசாட்சிக்கு தெரியும் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தான் கடவுளை நம்புவதாகவும், நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கவில்லை என்றாலும் கடவுள் அவருக்கு தண்டனை வழங்குவார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதவியில் இருக்கும் விஷால் போன்றவர்கள் திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை பற்றி ஏதாவது நான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஸ்ரீரெட்டி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *