இன்னும் சிலமணி நேரங்களில் மும்பை வருகிறது ஸ்ரீதேவி உடல்

நடிகை ஸ்ரீதேவியின் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக துபாய் அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளதால் இன்னும் சிலமணி நேரங்களில் ஸ்ரீதேவி உடல் மும்பை வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தவறுதலாக குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்தார். அவரது பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனையில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது தெரியவந்தது. எனவே ஸ்ரீதேவி மரணம் குறித்து துபாய் போலீசார் போனிகபூர் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தியதால் அவரது உடல் இந்தியா கொண்டுவரப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித குற்றவியல் நோக்கமும் இல்லை என்று துபாய் போலீசார் தகவல் வெளியிட்டனர். இந்திய தூதரகத்தில் முறையான ஆவணங்களைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் காவல்துறை அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் இன்றிரவு மும்பை கொண்டு வரப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *