அஜீத்துடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் மற்றும் நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி ஆகிய தமிழ் படங்களிலும், மேலும் ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

31வயதாகும் சமீரா ரெட்டி கடந்த இரண்டு வருடங்களாக ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்திவரும் 33 வயது ஆகாஷி வர்தே என்பவரை காதலித்து வருகிறார். இருவரது வீடுகளும் மும்பையில் ஒரே தெருவில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததால் சென்ற 14ஆம் தேதி சமீரா ரெட்டியின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

வரும் 2014ஆம் ஆண்டு ஏபரல் மாதம் திருமணம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சமீரா ரெட்டியும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படத்தில் நடிப்பேன் என்றும் கூறியுள்ள இவர், தற்போது அஜய் தேவ்கானுடன் நாம் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *