கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, அசல், வேட்டை, வெடி, போன்ற தமிழ் படங்களிலும், தெலுங்கு இந்தி போன்ற மொழிகளிலும் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு நேற்று திடீர் திருமணம் நடந்தது.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சமீரா ரெட்டிக்கும் மும்பை தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் வரும் ஏப்ரல் மாதம் திருமணம் செய்வதாகதேதி முடிவாகியிருந்தது. இந்நிலையில் நேற்று தொழிலதிபர் அக்ஷய் வர்தே வீட்டில் திடீரென சமீரா ரெட்டிக்கும், அவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர். கர்நாடக தொழிலதிபர் விஜய் மல்லையா திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திடீரென திருமணம் நடத்தியது ஏன் என்பது குறித்து இருவீட்டார்களும் விளக்கமளிக்க மறுத்துவிட்டனர். தொழிலதிபர் அக்ஷய் வர்தே அடுத்த மாதம் தொழில் சம்மந்தமாக வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அவர் திரும்பி வர பல மாதங்கள் ஆகும் என்ற நிலை இருப்பதால்தான் இந்த திடீர் திருமணம் என மும்பை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *