ராதாவும், அம்பிகாவும் சகோதரிகள் என்பது அனைவருக்கும் தெரியும். அம்பிகா படம் இயக்க ஆரம்பித்த பிறகு அவர்களுக்கு சுரேஷ் என்ற தம்பி இருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்த நடிகை சகோதரிகளின் உடன்பிறப்புகள் அத்துடன் முடியவில்லை. அம்பிகாவுக்கும் ராதாவுக்கும் நடுவில் மல்லிகா என்றொரு சகோதரி இருக்கிறார். அதன் பிறகு அர்ஜுன் என்ற சகோதரர். ஆக மொத்தம் அம்பிகாவையும் ராதாவையும் சேர்த்து மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள்.

அம்பிகா நடித்துக் கொண்டிருந்ததால் மல்லிகாவுக்கு முதலில் திருமணம் நடந்தது. அவரின் மகள் வினிதாவுக்குதான் இப்போது திருமணம் நடக்கயிருக்கிறது.

இந்த சொந்தபந்த சிக்கல்களை தெரியாதவர்கள் கார்த்திகாவுக்கு திருமணம் என்று செய்தி வெளியிட, எனக்குத் தெரியாம என் பொண்ணுக்கு கல்யாணமா என்று அதிர்ச்சியாகிவிட்டார் ராதா.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *