shadow

monika35அழகி,சிலந்தி, பகவதி போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை மோனிகா, திடீரென முஸ்லீம் மதத்திற்கு மாறியதோடு சினிமாவில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை மோனிகா, அழகி, காதல் அழிவதில்லை, பகவதி,சண்டக்கோழி, போன்ற திரைப்படங்களில் நடித்தவர். வாய்ப்புகள் சரியாக அமையாததால் சிலந்தி என்ற படத்தில் படுபயங்கர கவர்ச்சி நடிகையாக மாறினார். அப்படியும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பின்னர் மலையாளத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் முஸ்லீம் மதம் குறித்த புத்தகங்களை தீவிரமாக படித்துவந்த மோனிகா, பின்னர் முஸ்லீமாக மதம் மாற முடிவு செய்தார். பிறப்பில் கிறிஸ்துவரான மோனிகா முறைப்படி முஸ்லீமாக மாறியதோடு, தன்னுடைய பெயரை ரஹிமா என்றும் மாற்றிக்கொண்டார். மேலும் இனி சினிமாவில் நடிக்கபோவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளார்.

நடிகை மோனிகா சிறுவயது முதல் இதுவரை மொத்தம் 69 திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள படங்களும் அடங்கும்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1ks2EF5″ standard=”//www.youtube.com/v/zh4doTCki0Y?fs=1″ vars=”ytid=zh4doTCki0Y&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7901″ /]

Leave a Reply