shadow

விஷால் கட்டும் முதியோர் இல்லத்திற்கு ஈசிஆரில் இடம் கொடுக்கும் நடிகை

நடிகர் சங்க செயலாளர் பதவியேற்றதில் இருந்தே விஷால் நலிந்த நடிகர், நடிகைகளுக்கு பல உதவிகள் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக வயதான, குடும்பத்தினர்களின் ஆதரவு இன்றி இருக்கும் சீனியர் நடிகர்கள் மீது பரிவுடன் அவர் பல உதவிகள் செய்து வருகிறார்

இந்த நிலையில் குடும்பத்தினர்களால் கைவிடப்பட்டு கஷ்டப்படும் சீனியர் நடிகர்களுக்காக முதியோர் இல்லம் ஒன்றை விஷால் கட்ட திட்டமிட்டுள்ளாராம். விஷாலின் இந்த திட்டம் குறித்து கேள்விப்பட்டவுடன் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியும் பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையுமான லலிதகுமாரி, தனக்கு சொந்தமான ஈசிஆர் இடத்தை தர முன்வந்துள்ளார்.

தனது தந்தையும் நடிகருமான ஆனந்தன், தனது சகோதரியும் நடிகையுமான டிஸ்கோ சாந்தி ஆகியோர் கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த முதியோர் இல்லத்திற்கு தன்னால் முயன்ற உதவியை செய்ய தயாராக இருப்பதாகவும் லலிதகுமாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply