shadow

தொலைக்காட்சி பெட்டி தன்னுடைய மேல் விழுந்த அதிர்ச்சியால் பிரபல நடிகை ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக அவர் மரணம் அடைந்தார்.

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை ஜீன் கெண்ட். இவர் மர்லின் மன்றோ மற்றும் லாரன்ஸ் ஒலிவர் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.  1940களில் பிரபலமான இந்த நடிகைக்கு தற்போது 92 வயது ஆகிறது. இவருடைய கணவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோசப் ரமார்ட் என்பவர் கடந்த 1989ஆம் ஆண்டு இறந்த பின்னர் ஜீன் கெண்ட் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஜீன் கெண்ட் தனது விட்டில் டிவி அருகேயுள்ள தனது மாத்திரைகளை எடுக்க முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக டிவி இவர் மேல் விழுந்தது. டிவி தனது மேல் விழுந்த அதிர்ச்சியால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மரணம் அடைந்தார். மறுநாள் வீட்டை சுத்தம் செய்பவர் வந்த பார்த்தபோதுதான் இவர் மரணம் அடைந்தது தெரிய வந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் டிவி இவருடைய நெஞ்சுப்பகுதியில் விழுந்ததால் இவருக்கு மாரடப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறுகிறது. பழம்பெரும் நடிகை ஒருவரின் மரணம் ஹாலிவுட் சினிமா கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    9aa

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *