shadow

38 வயதில் திருமணத்திற்கு தயாரான விஜய் பட நடிகை

விஜய் நடித்த ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கவுசல்யா. அதன்பின்னர் திருமலை, பிரியமுடன் ஆகிய விஜய் படங்களிலும் நடித்தார்., மேலும் காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் ஆகியவை அவர் நடித்த சில முக்கிய படங்கள் ஆகும்.

இந்த நிலையில் தற்போது 38 வயதாகும் நடிகை கவுசல்யா திருமணத்திற்கு தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளேன். என் மனதுக்கு பிடித்த ஒருவரை மணக்க இருக்கிறேன். எனது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர். விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “நிறைய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. இங்குள்ள புட்டும் கடலையும் எனக்கு பிடித்த உணவு” என்றார்.

Leave a Reply