மும்பையை சேர்ந்த நடிகை அலேபியா கபாடியா. 28 வயதான இந்த நடிகை பிரபல ஹிந்தி தொலைக்காட்சி தொடரான “பியார் காபியாரா பியார் கா டார்ட் ஹை மித்தா மித்தா” என்ற தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் நேற்று தனது காரில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென காரில் மிக அருகில் வந்து ஃபேஸ்புக்கில் தன்னை நண்பராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அவரது பேச்சை அலட்சியப்படுத்திய நடிகை பதில் பேசாமல் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் நடிகையின் காரை உரசியபடி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அந்த மர்ம நபரை தனது செல்போனில் படம் பிடித்தார். அவரது கார் எண்ணையும் புகைப்படம் எடுத்து போலீஸில் புகார் செய்தார்.

நடிகை அலேபியாவின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் காரின் எண்ணை (MH – 01- PA-598) வைத்து அந்த மர்ம நபர் ஒரு சினிமா ஒளிப்பதிவாளர் என்றும், அவரது பெயர் முத்துசுவாமி அரசு என்பதையும் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

இந்த தகவலை நடிகை அலேபியா தனது ஃபேஸ்புக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *