shadow

பாபநாசம் நடிகையின் ஆபாச படத்தை இணையத்தில் பரப்பியவர்கள் சிறுவர்களா? திடுக்கிடும் தகவல்

asha sarathஉலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த பிரபல நடிகை ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு சமீபத்தில் சில மர்ம நபர்கள் இணையதளங்களில் பதிவு செய்தனர். இதுகுறித்து புகார் அளித்த நடிகை ஆஷா சரத், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்குமாறு காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அவருடைய புகாரின் அடிப்படையில் களத்தில் இறங்கிய சைபர் க்ரைம் காவல்துறை அதிகாரிகள் தற்போது இரண்டு பேரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த கேரள காவல்துறையினர், நேற்று இந்த விவகாரம் தொடர்பாக 16 வயதுக்கும் குறைவான  இரண்டு சிறுவர்களை மலப்புரம் என்ற பகுதியில் கைது செய்துள்ளனர். கைதான 2 சிறுவர்களும் ஆஷா சரத் மட்டுமின்றி இன்னும் பல முன்னணி நடிகைகளின் போலி ஆபாச வீடியோக்களையும், சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சைபர் கிரைம் போலீசார்  அந்த 2 சிறுவர்களையும் விசாரித்ததில்,  இந்த உண்மைகள் வெளியே வந்துள்ளன. கைதான 2 சிறுவர்களின் விவரங்களையும் கேரள காவல் துறையினர் இதுவரை வெளிவிடவில்லை.

போலி ஆபாச வீடியோ வழக்கு, தற்போது முடிவுக்கு வந்ததில் நிம்மதி அடைந்துள்ள  ஆஷா சரத், தான் இந்த வழக்கை சந்தித்தபோது தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்

Leave a Reply