shadow

actress arrest14வயதான சொந்த மகளை ரூ.1.5 லட்சம் பணத்திற்காக விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற நடிகை ஒருவரையும் அவருக்கு உதவியாக இருந்த இயக்குனர் ஒருவரையும் சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் கோலிவுட் திரையுலகம் அதிர்ந்து போயுள்ளது.

சினிமா, தொலைக்காட்சி தொடர், விளம்பரப்படங்கள் ஆகியவற்றில் நடித்தவர் 35வயது ராஜேஸ்வரி என்ற நடிகை இவரும் செந்தமிழ் அரசு என்ற சினிமா இயக்குனரும் சேர்ந்து ராஜேஸ்வரியின் மகளை விபச்சாரத்தில் தள்ள முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், கஸ்டமர் போல இவர்கள் இருவரையும் அணுகி இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 14வயது சிறுமியை மீட்டு மைலாப்பூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் போலீஸார் சேர்த்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply